செருநல்லூர் பகுதியில் அடையாளம் தெரியாதவர்கள் கடத்தியதாக மாணவன் நாடகம்

நாகப்பட்டினம் மாவட்டம் செருநல்லூர் பகுதியில் குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுவனை அடையாளம் தெரியாதவர் கடத்தியதாக நாடகம் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட செருநல்லூர் பகுதியில் குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் சிறுவன் பள்ளி செல்வதற்காக நடந்து சென்றபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் பணம் கேட்டு மிரட்டியும்,

கையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகவும் சிறுவன் கூறிய அடிப்படையில் சிறுவனின் உறவினர்கள் சிறுவனை கீழ்வேளுர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து,மேற்படி சிறுவனின் தந்தை கீழ்வேளுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனே விசாரணையை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் விசாரணையை துரித படித்த உத்தரவு பிறப்பித்ததின் பேரில் முதற்கட்ட விசாரணையில் மேற்படி சம்பவம் ஏதும் நடைபெறவில்லை எனவும்,

பள்ளி செல்வதற்கு பயந்து இச்சம்பவம் நடைபெற்றதாக பொய்யாக சிறுவன் கூறியுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்தது, மேலும், இச்சம்பவத்தை கீழ்வேளூர் GH -ல் Lab Technician (Temporary Staff) ஆக வேலை பார்க்கும் கலைமகள் என்பவர் குழந்தை கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

பின்பு உண்மை சம்பவம் தெரிந்த பிறகு மேற்படி குழந்தை கடத்தல் ஏதும் நடைபெறவில்லை என்று வருத்தம் தெரிவித்து மீண்டும் ஆடியோ வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்துவதாக பொய்யான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறான குழந்தை கடத்தல் பற்றி பரவி வரும் தகவல் அனைத்தும் உண்மைக்கு மாறானறு இதுவரை குழந்தைகள் காணாமல் போனது மற்றும் கடத்தப்பட்டது பற்றிய எந்த ஒரு புகாரோ தகவலோ வரவில்லை, எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை.

குழந்தைகள் கடத்துவதாக வரும் புகைப்படங்கள். வீடியோக்கள் அனைத்தும் போலியானவை பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் யாரும் பரப்பவேண்டாம் மேலும் அவ்வாறு பரப்புவர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் மேலும், பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண் 100 அல்லது உங்கள் எஸ் பி யுடன் பேசுங்கள் 8428103090 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள்

Tags

Next Story