ஆசிரியர் அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி - போலீசார் விசாரணை
பைல் படம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜன் தெருவில் அரசு நிதி உதவி பெறும் உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இஸ்லாமிய மாணவ மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர் இந்த பள்ளியில் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்த தவுலத்தின் மகள் முஸ்கான் என்பவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் உருது ஆசிரியரான மசூத் என்பவர் பள்ளி மாணவியை ஏன் பேனா எடுத்து வரவில்லை எனக்கூறி காலில் அடித்துள்ளார் பின்னர் பெஞ்ச் மீது ஏறி நிற்க கூறியுள்ளார். இதனால் கால் வலி தாங்க முடியாமல் மாணவி முஸ்கான் அழுதுள்ளார். பின்னர் திடீரென கன்னத்தின் மீது ஆசிரியர் தாக்கவே மயங்கி விழுந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து மாணவி முஸ்கானின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story