கள்ளிக்குடி சத்திரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
அரசு மருத்துவமனை
மகளைப் பிரிய மனமில்லாமல் தொலைதூரத்தில் கல்வி பயில அனுமதிக்காத பெற்றோர்- மனவிரக்தியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை திருமங்கலம் அருகே சோகம் திருமங்கலம் அருகே மகளை பிரிய மனம் இல்லாததால் வெளியூரில் படிக்க பெற்றோர் அனுமதிக்க வில்லை.
இதனால் விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெரியசாமி மனைவி ஜோதிலட்சுமி இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர் மூன்றாவது பிள்ளையான கவிதா 17 கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில் 600 க்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார் இதனை அடுத்து நண்பர்கள் ஆலோசனையின் பேரில் வேளாண் பாடப் பிரிவில் பயில விருப்பப்பட்டு பல்வேறு இடங்களில் விண்ணப்பித்துள்ளார்.
இதில் திருப்பூரைச் சேர்ந்த தனியார் வேளாண் கல்லூரியில் கவிதாவிற்கு கல்லூரியில் சேர அனுமதி கிடைத்தது இதனை தொடர்ந்து கவிதா திருப்பூரில் கல்லூரியில் சேர தனக்கு இடம் கிடைத்துள்ளதாகவும் அதனால் அங்கு சென்று படிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். கல்லூரியில் இடம் கிடைத்தாலும் ஒரே மகளான கவிதாவை பிரிய மனம் இல்லாத பெற்றோர் அவ்வளவு தொலைவில் சென்று படிக்க வேண்டாம் அருகில் ஏதாவது கல்லூரியில் இடம் கிடைத்தால் அங்கு சேர்ந்து படித்துக்கொள் என பெற்றோர் கூறியதாக சொல்லப்படுகிறது தனக்கு கல்லூரியில் சேர அனுமதி கிடைத்தும் பெற்றோர்கள் சம்மதிக்காததால் கவிதா மன விரக்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து பெற்றோரிடம் கேட்டும் அனுமதி கிடைக்காததால் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கவிதாவின் குடும்பத்தினர் கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது உள்ளே கவிதா தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.
தொடர்ந்துசம்பவம் குறித்து கள்ளு குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த கவிதாவின் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கல்லூரியில் சேர இடம் கிடைக்கும் மகளை பிரிய மனம் இல்லாமல் பெற்றோர் கல்லூரியில் சேர அனுமதிக்காததால் மனவிரக்தியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.