மாணவர் விடுதி: வீடியோ கான்பரன்சிங்கில் முதல்வர் திறப்பு
தர்மபுரியில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாணவர் விடுதி கட்டடத்தை, இன்று திறந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தர்மபுரி, டிச.27: சென்னை கலைவாணர் அரங்கத்திலிருந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டடத்தினை காணொலி.காட்சியின் வாயிலாக இன்று திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.171 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.184 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கினார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பார்வையிட்டார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் 400 ஆதிதிராவிடர் நல மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் 28 அறைகளுடன், சுமார் 200 மாணவர்கள் உணவு அருந்தும் வகையிலான உணவு அருந்தும் அறை, சமையல் அறை, பொருட்கள் வைப்பு அறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் விடுதி கட்டப்பட்டு இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தர்மபுரி நகர்மன்றத் தலைவர் இலட்சுமி நாட்டான் மாது, நல்லம்பள்ளி ஒன்றியக் குழுதலைவர் மகேஸ்வரி பெரியசாமி, நல்லம்பள்ளி ஒன்றியக்குழு துணை தலைவர் பெரியண்ணன், செயற்பொறியாளர் (தட்கோ) நாகராஜன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாகுல் அமித், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சுப்பிரமணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மாணவர்கள், காப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.