சென்டர் மீடியனில் மோதி தூக்கி வசப்பட்ட பைக் - மினி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு

சென்டர் மீடியனில் மோதி தூக்கி வசப்பட்ட பைக் - மினி   வேன் சக்கரத்தில்  சிக்கி மாணவர் உயிரிழப்பு
X

சிவா 

நாகமங்கலம் குடிசை மாற்று வாரியம் பகுதியில் வசிப்பவர் சங்கர் என்பவரின் மகன் சிவா எம் ஐ டி கல்லூரியில் படித்து வருகிறார்..இவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு திருச்சி நோக்கி செல்லும் சாலையில் செல்லும்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க தனது கேடிஎம் பைக்கை திருப்பிய போது அம்பேத்கர் நகர் வளைவு சாலையில் உள்ள செண்டர் மீடியத்தில் மோதியுள்ளார். மோதிய வேகத்தில் சிவா தூக்கி வீசப்பட்டு மறு சாலையில் வந்து கொண்டிருந்த காய்கறி ஏற்றி வந்த மினி சரக்கு வேன் சக்கரத்திற்குள் சிக்கி உள்ளார். சிக்கிய வேகத்தில் மினி சரக்கு லாரியின் கண்ணாடிகள் உடைந்து கட்டுப்பாட்டை இழந்து 50 அடி தூரம் இழுத்துச் சென்று மரத்தில் மோதி நின்றது, இதில் மாணவன் சிவா சமப்வ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அறிந்த மணிகண்டம் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறை உதவியுடன் மினி சரக்கு லாரியில் சிக்கி இருந்த மாணவன் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story