திருப்பத்தூர் அருகே மாணவிக்கு திருமணம்: 3பேர் மீது வழக்கு பதிவு
கோப்பு படம்
திருப்பத்தூர் அருகே 8ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்! 3 பேர் மீது வழக்கு பதிவு! திருப்பத்துார் அடுத்த ஆண்டியப்பனுார் பகுதியை சேர்ந்தவர் குமார்(27). கட்டடத் தொழிலாளி.
இவருக்கும், 8ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவிக்கும் கடந்த மாதம் 26ம் தேதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், திருப்பத்துார் அருகே உள்ள ஜலகம்பாறை முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் நடந்ததாக சமூக நலத்துறை திருப்பத்துார் வட்டார விரிவாக்காளர் அம்சவேணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில்,அதிகாரிகள் கொண்ட குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், கட்டடத் தொழிலாளி குமாருக்கும் சிறுமிக்கும் சட்ட விரோதமாக திருமணம் நடந்தது உறுதியானது.
இதனை அடுத்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசார் கட்டட தொழிலாளி குமார் மற்றும் அவரது தாய் புஷ்பா மற்றும் சிறுமியின் தாய் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.