மாநில லூனா கேம்ப் போட்டியில் மாணவி வெற்றி

மாநில லூனா கேம்ப் போட்டியில் மாணவி வெற்றி

மாநில அளவிலான லூனா கேம்ப் போட்டியில், வெற்றி பெற்ற பாலக்கோடு மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர். 

மாநில அளவிலான லூனா கேம்ப் போட்டியில், வெற்றி பெற்ற பாலக்கோடு மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர்.

மாநில லூனா கேம்ப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு. தர்மபுரி மாவட்டம் டிச.15: நிலவில் நடக்கும் ஆய்வுகள் அது சார்ந்த தொழில் நுட்ப தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் சார்பில் கடந்த வாரம் கோவையில் மாநில அளவிலான லூனா கேம்ப் போட்டி நடத்தியது. இதில் தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில் எழுத்து தேர்வு, செயல் திட்டம் தயாரித்தல் மற்றும் செயல் திட்டத்தை விளக்குதல் என 3 கட்டங்களாக தேர்வு நடந்தது. இந்த 3 கட்ட தேர்விலும் 36 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி இனியா சிறந்த படைப்பிற்கான சான்றிதழ் பெற்றார். மாணவி இனியா தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மாணவியை வழி நடத்திய சமூக அறிவியல் ஆசிரியை செல்வி உடனிருந்தார்.

Tags

Next Story