நீலகிரியில் நீட் தேர்வு எழுதிய 787 மாணவர்கள்

நீலகிரியில் நீட் தேர்வு எழுதிய  787 மாணவர்கள்

தேர்வு எழுத வந்த மாணவர்கள் 

நீலகிரியில் நேற்று நடந்த நீட் நுழைவு தேர்வை 787 மாணவர்கள் எழுதினர். 48 மாணவர்கள் தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆகினர்.

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024-25ம் கல்வியாண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது‌. இந்த தேர்வை, தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் என நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஒரே மையமான ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஒரே மையம் என்பதால் கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை தேர்வுக்கு அழைத்து வந்திருந்தனர். தேர்வர்கள் காலை 11 மணியில் இருந்து தேர்வு எழுதும் மையத்துக்குள் ஒவ்வொரு நபராக சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். மாணவ- மாணவிகள் பயோ மெட்ரிக் எடுத்து, புகைப்படம் எடுக்கப்பட்டது. மேலும் நுழைவு சீட்டில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

மதியம் 1.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. 2.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் தேர்வு எழுத வந்த போது கெடுபிடிகள் குறித்து மாணவர்கள் பலருக்கும் தெரிந்து விட்டதால், அதற்கு ஏற்ப தயாராக வந்திருந்ததால் பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதினர். நீலகிரி மாவட்டத்தில் மாணவர்கள், மாணவியர் என பேர் தேர்வு எழுத 835 பேருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில் 48 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 787 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story