பத்தாம் ஆண்டு பள்ளி விழாவில் மாணவர்கள் அசத்தல்

கரூர் மாவட்டம், சின்ன சேங்கலில் 10-ம் ஆண்டு பள்ளி விழாவில், பள்ளி மாணவ மாணவியர்வ்பாடலுக்கேற்ற நடனம் ஆடி அசத்தினர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட சின்ன செயன்கள் பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று இரவு 10 ஆம் ஆண்டு துவக்க விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பு செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயின்ற மாணவ-மாணவியர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் இசைக்கப்பட்ட பாடலுக்கு ஏற்றவாறு பள்ளி மாணவ- மாணவியர் பல்வேறு பாடலுக்கு ஆடி பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்- ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பள்ளியின் பத்தாம் ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாரியம்மன் மீது பாடப்பட்ட பக்தி பாடலுக்கு, கையில் வேப்பிலையுடன் ஆட்டம் ஆடி அனைவரையும் மாணாக்கர்கள் கவர்ந்தனர்.

Tags

Next Story