கோடை விடுமுறை முடிந்து உற்சாகமுடன் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள்

திருப்பூரில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு திரும்பினார்.

கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு திரும்பினர். கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 1822 பள்ளிகள் உள்ளது அனைத்து பள்ளிகளும் இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளது இதனைத் தொடர்ந்து முழு எச்சில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு திரும்பி உள்ளனர்.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பயிற்சி கையேடுகள் உள்ளிட்டவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவை இன்று முதல் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என பள்ளி கல்வி த்துறை மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய புத்தகங்கள் புதிய பேக்குகள், பென்சில் பேனா என புதிய பொருட்களோடு மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு திரும்பி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story