சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்- மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்- மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு கஞ்சா-கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களில் உள்ள 10 கல்லூரிகள் 6 பள்ளிகளில் பயிலும் 1445 மாணவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகாம் பேரணி நடைபெற்றது.மேலும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story