விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல் !

விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்  ஆட்சியர் தகவல் !

ஆட்சியர்


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ/மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ/மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 3 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் என ஆக மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி / கல்லூரி மாணவ/மாணவியர் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களைப் பெற்று சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடம் பள்ளி/கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 2024/2025 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையானது 03.07.2024 முதல் 07.07.2024 –இக்குள் முதல் கட்ட மாணாக்கர் தெரிவு ஆலோசனை குழுவின் மூலம் மேற்கொள்ளப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ/மாணவிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கீழ்தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story