கல்விக்கடன்‌ பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கல்விக்கடன்‌ பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித் 

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கல்வித்தொகை ஒரு சுமையாக இருத்தல் கூடாது என்ற நோக்கில், அவர்களது கல்விச்செலவினை, வங்கிகள் மூலம் கடனாக வழங்கி, பின்னர் அக்கடன் தொகையினை கல்வியினை முடித்து, வேலை வாய்ப்பினை பெற்ற பின்னர் திருப்பிச் செலுத்துவதற்கு தமிழ்நாடு அரசு வழிவகைகள் செய்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூலம் வங்கிகள் வாயிலாக, பொறியியல், மருத்துவம் மற்றும் கலைக்கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு வரை பயின்று, இம்மாவட்டத்தினை இருப்பிடமாகக் கொண்டு, தற்போது, கல்லுாரிகளில் இடம் கிடைத்ததற்கேற்றவாறு, பிற மாவட்டங்களில் மருத்துவம், பொறியியல் மற்றும் கலைக்கல்லுாரிகளில் பயின்று வரும் மாணவ / மாணவியர்கள் கடனுதவிகள் பெறலாம்.

இக்கல்விக்கடன் வழங்கும் நிகழ்விற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக, வளர்ச்சிப்பிரிவில் இதற்கென கல்விக்கடன் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது, இம்மையத்தினை அணுகி பயன்பெறலாம். மேலும், கல்விக்கடன் குறித்த விபரங்கள் பெற மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், 9894936042 என்ற தொலைபேசி எண்ணிலோ, இளநிலை உதவியாளர் 7708257112 என்ற தொலைபேசி எண்ணிலோ மற்றும் இளநிலை உதவியாளர் 9597665676 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு கல்விக்கடன் குறித்து கேட்டறிந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story