வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்!

வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்!
X

வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவிகள் வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நகராட்சி சார்பில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 18 வயதிற்கு மேற்பட்ட முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வடஆண்டாப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் இன்று (02.04.2024) வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

Tags

Next Story