மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை திருவேற்காடு, வேலப்பன்சாவடியில், சவீதா பல்கலை கழகத்தின் கல்லுாரி உள்ளது. அதில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் எம்.பி.ஏ., படிக்கின்றனர். இந்த நிலையில், அவர்கள் நேற்று காலை, கல்லுாரி வாசலில் கூடி, நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவேற்காடு போலீசார், அங்கு சென்று மாணவர்களிடம் விசாரித்தனர். மாணவர்கள் கூறியதாவது,
முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கல்வி கட்டணமாக, 3 லட்சம் ரூபாயை, கல்லுாரி நிர்வாகத்திடம் செலுத்தினோம். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்டதற்கான ரசீது ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஒவ்வொரு மாணவரும், 50,000 முதல், 2 லட்சம் ரூபாய் வரை, கட்டண நிலுவை வைத்திருப்பதாகவும், அதை உடனே செலுத்த வேண்டும் எனவும் கல்லுாரி நிர்வாகம் கூறியது.
இப்பிரச்னையால், இரண்டு வாரமாக வகுப்புகள் நடத்தப்படாமல் உள்ளன. இவ்வாறு மாணவர்கள் கூறினர். அதன் பிறகு மாணவர்களுடனும் கல்லுாரி நிர்வாக ஊழியர்களுடனும் போலீசார் பேச்சு நடத்தினர். அதன்பின் ஏற்பட்ட சமரசத்தால் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.