கடகத்தூர் கரும்பு சாகுபடி பகுதியில் மாணவர்கள் கள ஆய்வு

கடகத்தூர் கரும்பு சாகுபடி பகுதியில் மாணவர்கள் கள ஆய்வு

கள் ஆய்வு 

கடகத்தூரில் கரும்பு சாகுபடி மற்றும் நாட்டுசர்க்கரையில் மதிப்பு கூட்டுதல் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 200 பேர் களப்பணிக்காக கடகத்தூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு மாணவ, மாணவிகள் கரும்பு பயிரிடப்பட்டுள்ள நிலத்திற்கு சென்று விவசாயிகளுடன் கலந்து உரையாடினர். இதையடுத்து மாணவ, மாணவிகளிடம் நற்சுவை சுகுமார் கூறியதாவது,

தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அதிகளவில் செய்து வருகிறோம். கடகத்தூர் பகுதியில் கரும்பு சாகுபடியோடு நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் ஆகியவையும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தயாரிக்கப்படுகிறது. எங்களது விவசாய நிலத்தில் இயற்கை உரங்கள் மூலம் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும், அவர் பேசும் போது, கரும்பு நடவு செய்தல், இயற்கை உரம் பயன்படுத்துதல், தண்ணீர் பாய்ச்சும் முறைகள், கரும்புக்கு களை எடுத்தல், கரும்பு அறுவடை, கரும்பில் இருந்து சாறு பிழிந்து ரசாயணம் கலக்காமல் நாட்டு சர்க்கரை தயாரித்தல், நாட்டு சர்க்கரையை சிறுதானியத்துடன் மதிப்பு கூட்டி பல்வேறு உணவு பண்டங்கள் தயாரித்தல் ஆகியன குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த கள ஆய்வில் முருகேசன், ஏற்றுமதியாளர் வெங்கடேசன், நற்சுவை நிர்வாக இயக்குனர் கீதாசுகுமார், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நற்சுவை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story