பட்டுக்கோட்டை உழவர் சந்தையில், மாணவிகள்  விவசாயிகளுடன் கலந்துரையாடல்

பட்டுக்கோட்டை உழவர் சந்தையில், மாணவிகள்  விவசாயிகளுடன் கலந்துரையாடல்

கலந்துரையாடிய மாணவிகள்

பட்டுக்கோட்டை உழவர் சந்தையில், வேளாண் கல்லூரி மாணவிகள்  விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள், ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின் கீழ், பட்டுக்கோட்டை உழவர் சந்தையில், விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள உழவர் சந்தையில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் தாரணி, ஜனனி, ஹரிணி, அனுரிதா, ஜனனி, ஈஸ்வரி, எழிலரசி, பாலபாரதி, ஞானகற்பகவல்லி, பாவனா ஆகியோர், விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் கலந்துரையாடி, காய்கறிகளின் விலை நிலவரம் மற்றும் அவற்றின் விற்பனை குறித்து கேட்டறிந்தனர்.

மேலும், வேளாண் அலுவலரிடம் உழவர் சந்தை செயல்படும் நேரம், விலை நிர்ணயம் செய்யும் முறை, தரம் பிரித்தல் மற்றும் சந்தையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். சந்தையில் உள்ள குளிர்பதனக் கிடங்கு மூலம், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைத்து, தேவைக்கேற்ப எடுத்து விற்பனை செய்வதன் மூலம் எவ்வாறு பயனடைகின்றனர் எனவும் தெரிந்து கொண்டனர்.

Tags

Next Story