சஞ்சீவக் கரைசல் செயல் விளக்கம் செய்த வேளாண் கல்லூரி மாணவர்கள்
வேளாண்மை அனுபவப் பயிற்சி
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக கீரம்பூர் கிராமத்தில் சஞ்சீவக் கரைசல் செயல் விளக்கம் செய்தனர்.சஞ்சீவக் கரைசல் நுண்ணுயிரிகள் மற்றும் விரைவான எச்சம் சிதைவு மூலம் மண்ணை வளப்படுத்த பயன்படுகிறது.
இதனை 100-200 கிலோ பசுவின் சாணம், 100 லிட்டர் மாட்டு சிறுநீர் மற்றும் 500 கிராம் ம.வெல்லம் ஆகியவற்றை 300 லிட்டர் தண்ணீரில் 500 லிட்டர் மூடிய டிரம்மில் கலக்கவும்.10 நாட்களுக்கு புளிக்கவைத்து பின் 20 மடங்கு தண்ணீரில் கரைத்து, ஒரு ஏக்கரில் மண் தெளிப்பான் அல்லது பாசன நீருடன் தெளிக்கவும்.
தெளிப்பதன் மூலம் அல்லது பாசன நீர் மூலம் மண்ணிற்கு கொடுக்கலாம். விதைப்பதற்கு முன் ஒன்று, விதைத்த இருபது நாட்களுக்குப் பிறகு இரண்டாவது மற்றும் 45 நாட்களுக்குப் பிறகு மூன்றாவதாக கொடுக்கலாம் என விளக்கம் அளித்தனர்.