அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவர்கள் உடற்கூறு ஆய்வு பயிற்சி
சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவர்கள் உடற்கூறு ஆய்வு பயிற்சியை மேற்கொண்டனர்.
சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவர்கள் உடற்கூறு ஆய்வு பயிற்சியை மேற்கொண்டனர்.
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சேலம் விம்ஸ் ஆஸ்பத்திரி வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தடய அறிவியல் தொழிற்பயிற்சி திட்ட பிரிவு மூலம் புதுச்சேரி அறிவியல் நிறுவனத்தில் உடற்கூறு ஆய்வு குறித்து 3 நாட்கள் பயிற்சி நடந்தது. மாணவர்களுக்கு துறை ரீதியான திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் நடந்த இந்த பயிற்சியில் மருத்துவ பிரேத பரிசோதனையில் உடற்கூறு செய்யப்படுவது எப்படி? இறப்பின் போது உடல் உறுப்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, கொலை, தற்கொலை போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் மரணங்களில் உடற்கூறு ஆய்வின் மூலம் சேகரிக்கப்படும் விவரங்கள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழும் அளிக்கப்பட்டது. பயிற்சியானது மாணவர்களின் துறை ரீதியான திறனை மேம்படுத்துவதோடு அவர்களுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான வாய்ப்பாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை துறையின் தடய அறிவியல் பிரிவு பொறுப்பாளர்கள் மோகன், கோமதி, லின்சி ஆகியோர் செய்து இருந்தனர். இந்த ஆண்டு முதல் சென்னை பையனூரில் ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தடய அறிவியல் தொழில்நுட்ப பிரிவு புதிதாக தொடங்கப்பட உள்ளது என்று துறை நிர்வாகிகள் கூறினர்.
Next Story