நவோதயா அகாடமி பள்ளி மாணவ, மாணவியர்கள் கொங்கு சகோதயா நடத்திய வில்வித்தைப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து சாதனை !!

நவோதயா அகாடமி பள்ளி மாணவ, மாணவியர்கள் கொங்கு சகோதயா நடத்திய வில்வித்தைப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து சாதனை !!

 Navodaya Academy 

நவ. 11. நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி பள்ளி மாணவ, மாணவியர்கள் கடந்த வாரம் நடைபெற்ற கொங்கு சகோதயா கூட்டமைப்பு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர். கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த நாமக்கல, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் 500க்கும் மேற்பட்ட வில்வித்தை விரர்கள் இடையே நாமக்கல் ஞானோதயா சிபிஎஸ்இ பள்ளியில் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. அதில் நமது நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவி.பா.ரோகிதா பத்தாம் வகுப்பு (17வயதிற்கு உட்பட்டோர் பிரிவில்) இரண்டாவது பரிசும், மாணவன் தேவக்பாபு (14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில்) முதல் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். அவர்களுக்கு இன்று காலை பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக்கூட்டத்தில் பள்ளி நிர்வாகி தேனருவி அவர்களால் பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. “அவர் பேசுகையில் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ள இந்த விளையாட்டை நாங்கள் ஒன்றாம் வகுப்பு முதலே தனிப் பயிற்சியாக கற்றுத் தருகின்றோம் இதனை முழுமையாக நீங்கள் பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலத்தில் நீங்களும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்கலாம் என்று வாழ்த்தி பாராட்டினார்” பள்ளி முதல்வர் ஆசிரியர்கள், சக மாணவ, மாணவியர்கள் அனைவரும் அவர்களை வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story