சென்னை மக்களுக்கு நிதி உதவி வழங்கிய உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள்

சென்னை மக்களுக்கு நிதி உதவி வழங்கிய உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள்

நிதியுதவி அளித்த மாணவர்கள் 

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உசிலம்பட்டி பள்ளி குழந்தைகள் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.சென்னையில் மழைநீர் முற்றிலும் வடியாததால் மக்கள் உணவின்றி வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு கட்சியினர் சமூக ஆர்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களால் முடிந்த நிதி உதவியை முதல்வரின் நிவாரணநிதிக்கு அனுப்பி வைத்தனர்.இளம் வயதிலேயே உதவும் மனப்பான்மையுடன் நிவாரண நிதி வழங்கி இருப்பது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஏற்பாட்டை பள்ளி தலைமையாசிரியர் மதன் பிரபு ஏற்பாடு செய்திருந்தார்,

Tags

Next Story