புதிய பள்ளி கட்டிடம் திறக்க வந்த தலைவர்களுக்கு மாணவர்கள் மரியாதை

புதிய பள்ளி கட்டிடம் திறக்க வந்த தலைவர்களுக்கு மாணவர்கள் மரியாதை

தலைவர்களுக்கு மாணவர்கள் மரியாதை

பூம்புகார் தொகுதி கிடங்கள் ஊராட்சி ஒன்றிய பள்ளிக் கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஒன்றியம் கிடங்கல் ஊராட்சிப் பள்ளியில் ரூ.27லட்சம் மதிப்பில் புதிய கட்டிடத்தை திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினருமான நிவேதாமுருகன் திறந்து வைத்தார். மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் தஞ்சை மண்டல தகவல் தொழில் அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகளும் விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவர்கள், பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைக்க வருகை வந்த தலைவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

Tags

Next Story