பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து  மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

ஆர்ப்பாட்டம்

அரசு பெண்கள் கல்லூரியை சேர்ந்த பதினாறு வயது மாணவி தற்கொலைக்கு தூண்டிய பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து துவாக்குடி அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் முன் 100 மேற்பட்ட மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நவம்பர் மாதம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மாணவர்கள் பருவ தேர்வு எழுதினர். இதில் பல்வேறு அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எல்லா துறைகளிலும் குறிப்பிட்ட ஒரு பாடப்பிரிவில் எல்லா மாணவர்களும் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண்,6,7,8 என ஒற்றை இலக்கத்தில் தேர்வு முடிவுகள் வந்துள்ளது. மற்ற பாடங்களில் அதிகமான மதிப்பெண் எடுத்த மாணவர்களும் குறிப்பிட்ட ஒரு பாடத்தில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வியை சந்தித்துள்ளனர். சில மாணவர்கள் தேர்வுக்கு வந்திருந்து தேர்வு எழுதியும் அவர்களது பாடத்தின் நேராக தேர்விற்கு வரவில்லை absent என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் தரப்பில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு மதிப்பெண் சரிபார்ப்பு தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழகத்தின் இத்தகைய கவனமின்மை போக்கை கண்டித்தும் மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை அரசு பெண்கள் கலைக் கல்லூரியை சேர்ந்த பதினாறு வயது மாணவி தற்கொலைக்கு தூண்டிய பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் முன் 100 மேற்பட்ட மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story