இஸ்ரேலை கண்டித்து தஞ்சையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலை கண்டித்து தஞ்சையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மாணவர் சங்கம்


பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து வருவதை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தலின்படி போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், ஒன்றிய அரசு பாலஸ்தீனத்திற்கு தன் ஆதரவை அழிக்காத மோடி அரசை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் சார்பில், தஞ்சாவூர மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு, மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கு. சந்துரு ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார். கிளை நிர்வாகிகள் தமிழரசன், மூர்த்தி, ராஜதுரை, எடிசன், ஜெகன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story