மாணவர்கள் உயர்கல்வி தொடர வேண்டும் : திருப்பூர் ஆட்சியர் பேட்டி!
மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 23 242 மாணவர்களும் தங்களது உயர்கல்வி தொடர வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் +2 தேர்ச்சி விகிதத்தில் 97.45 சதவீதம் பெற்றுக்கொடுத்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துகள். திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும், உயர்கல்வி தொடர வேண்டும். நன்றாக படிக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
மேலும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை பொருத்தவரை 95.75 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களின் கடின உழைப்பால் தான் நாம் முதலிடத்தை அடைய முடிந்தது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகிய நாங்கள் எல்லாம் சிறு வழிகாட்டுதல் மட்டுமே. அதுமட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் +2 தேர்ச்சி விகிதத்தில் 3வது முறை முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.