மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்- துணை ஆணையர்

மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்- துணை ஆணையர்

 காவல் துணை ஆணையர் சந்தீஷ் 

கோவை சரவணம்பட்டியில் தனியார் கல்லூரி ஆண்டு விழா இன்று நடைபெற்றது.இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் பங்கேற்றார்.நிகழ்விற்கு பின் தனியார் கல்லூரி மாணவர் ராகிங் செய்து தாக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் கோவையில் ஏராளமான கல்லூரிகள் இருப்பதாகவும் இங்கு ராக்கிங் என்பது அதிகளவில் இல்லை என்றவர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யபட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை செய்வதுடன் அறிவுரையும் வழங்கி வருகிறோம் என கூறியவர் வழக்கு பதிவு செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும், ஒருவர் மீது வழக்கு பதிவாகிவிட்டால் அரசு வேலை மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பெற தடையாக அமையும் என்பதால் கல்லூரி மாணவர்கள் இதுபோன்று ராகிங் சம்பவத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் ராகிங்க்கு எதிரான சட்டம் கடுமையாக உள்ளதாகவும் எனவே இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story