பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகளால் மாணவர்கள் அவதி
பள்ளி வளாகத்தில் குப்பைகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளிஎதிரில் குப்பைகளை கொட்டவேண்டாம் என நகராட்சி நிர்வாகத் தினர் எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து குப்பைகளைக் கொட்டி வருவதால் துர்நாற்றத்துடன் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆரணி கொசப்பாளையம் பழனிஆண்டவர் கோவில் தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வரை 200-க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், ஆரணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயே அதிக மாணவர்கள் பயிலும் பள்ளியாக இப்பள்ளி சிறப்பு பெற்றுள்ளது.
இந்த பள்ளிக்கு எதிரில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டில் சேகரமாகும் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் சூழ்நிலையில் மாணவர்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு எதிரில் குப்பைகளை அகற்றி, அந்த இடத்தில் இங்கு குப்பைகளை கொட்டக் கூடாது என்றும் மீறி குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி சார்பில் எழுதி வைக்கப்பட்டது.
ஆனால், இதைப் பொருள்படுத்தாத அப்பகுதிமக்கள் தொடர்ந்து அந்த இடத்தில் குப்பைகளைக்கொட்டி வருகின்றனர். மேலும், பள்ளித் தலைமையாசிரியர் திரு மால் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும்,அப்பகுதி தன்னார்வலர்கள் கூறுகையில், அரசுப் பள்ளிக்கு எதிரில் குப்பைகளைக் கொட்டாதீர்கள் என்று குப்பை கொட்டுபவர்களிடம் கூறினால் இதற்கு அவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பைகளை அகற்றுவதற்கு நாங்கள் பணம் தருகிறோம் என்று கூறு கின்றனர். அவர்களும் தினமும் சுத்தப்படுத்தி விட்டு செல்வார்கள்.
ஆனால், உடனே இப்ப குதி மக்கள் மீண்டும் குப்பைகளைக் கொட்டி அசுத்தப்படுத்தி விடுகின்றனர். இதனால், சுதா காரச் சீர்கேடு ஏற்பட்டு மாணவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப் புள்ளது. தற்போது மழைக் காலமாக இருப்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி மேலும் பல நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
ஆகையால், ஆரணிநகராட்சிகடுமையான நடவடிக்கைஎடுத் தால் மட்டுமே இங்கு குப்பைகளைக் கொட்டா மல் இருப்பார்கள் என்று தெரிவித்தனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் வடிவேலி டம் கேட்டதற்கு, அந்த இடத்தை நேரில் பார் வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.