முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த போட்டி தேர்வு மாணவர்கள்

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த போட்டி தேர்வு மாணவர்கள்

அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்

தஞ்சாவூர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், ரூ.2 கோடி மதிப்பில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், தமிழ்நாடு முதலமைச்சரால் காணொலிக் காட்சி வாயிலாக 05.01.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்படுகிற நூலகம் மற்றும் அறிவுசார் மையம் சிறப்பாக செயல்படுகிறது.

இம்மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தயார் செய்யும் வகையில் மாணவ, மாணவியர்கள் அமர்ந்து படித்திட இருக்கைகள், மேஜைகள், போட்டி உலகத்தில் அனைத்து தகவல்களையும் அறியும் வகையில் கணினிகள், அறிவு சார்ந்த செய்திகளை தரும் 2500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கலந்துரையாடல் அரங்கு, மாணவர்களின் பொருட்கள் வைப்பறை, உணவருந்தும் மேசை போன்ற அனைத்து வசதிகளுடன் நவீன முறையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு, ஏராளமான இளைய தலைமுறையினர் சாதனையாளர்களாக ஏற்றம் பெரும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய பயிற்சி வகுப்புகள் நாள்தோறும் நடைபெறுகிறது இந்த நூலகத்திற்கு வருபவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது மாணவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இம்மையத்திற்கு நாள்தோறும் சுமார் 200 மாணவ, மாணவியர்கள் அறிவை வளர்த்து ஆற்றல் வாய்ந்தவர்களாக மிளிர வருகை தருகின்றார்கள். இம்மையத்தில் பயிற்சி பெறுகின்ற தஞ்சாவூர் அண்ணா நகரில் வசிக்கும் சாந்தி, கணேஷ் நகர் சுமிசந்தியா, அம்மாபேட்டை ஜி.தினேஷ், மாரியம்மன் கோவில் எஸ்.சக்திவேல் ஆகியோர் தெரிவித்ததாவது: பள்ளி கல்லூரி படிப்பிற்குப் பிறகு போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்திட அரிய வாய்ப்பாகவும், அனைத்து வசதிகளையும் கொண்ட அமுதசுரபி போன்ற ஏராளமான புத்தகங்கள், கணினிகள், அடிப்படை வசதிகளுடன் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்க்கையில் வெற்றியாளர்களாக எங்களை தயார்படுத்திட ஊக்கம் அளித்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர். இவ்வாறு தஞ்சாவூரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக செயல்படுகிறது.

Tags

Next Story