ராமநாதபுரம் விண்வெளி மையத்துக்கு மாணவர்கள் சுற்றுப்பயணம்

ராமநாதபுரம் இந்திய விண்வெளி மையத்திற்கு முதுகுளத்தூர் தொழிற்கல்வி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் பள்ளிக் கல்வித்துறை உத்தரவின்படி முதுகுளத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி இயந்திரவியல் பிரிவு மாணவர்கள் ,தொழிற்கல்வி ஆசிரியர் மங்களநாதன், தொழிற்கல்வி பயிற்றுநர் விஜய்ஆனந்த் ஆகியோர் தலைமையில் திருநெல்வேலி மாவட்டம் மகேந்தரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உந்துமா வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர் இக் களப்பணத்தில் அருங் காட்சியகத்தில் இதுவரை விண்வெளியில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் , கிரயோஜெனிக் எஞ்சின் ஆகியவற்றை பற்றி விஞ்ஞானிகள் தெளிவாக எடுத்து விளக்கினார்கள். இக்களபயணம் மேல்நிலை தொழிற்கல்வி இயந்திரவியல் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story