தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

பள்ளி திறப்பதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் சிறப்பாக செய்திருக்க வேண்டும் ஆய்வுக்கு கூட்டத்தில் இணை இயக்குனர் அறிவுறுத்தினார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள தேர்வு கூட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மா. மஞ்சுளா வரவேற்று பேசினார். அரசு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெறுவது சம்பந்தமாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிக ஈடுபாடு இருக்க வேண்டும். இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மையான இடத்திற்கு வர அதிகம் உழைக்க வேண்டும். அதற்காக தேர்ச்சி குறைவாக உள்ள மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வருகிற ஜனவரி இரண்டாம் தேதி பள்ளி திறப்பதற்கான பள்ளி வளாகத் தூய்மை, வகுப்பு வகுப்பறை தூய்மை, கழிப்பறை தூய்மை, உள்ளிட்ட அனைத்து முன் ஏற்பாடு பணிகளையும் சிறப்பாக செய்திருக்க வேண்டும். பள்ளிகளில் குடிநீர் தொட்டி சுத்தம் செய்து பூட்டு போட்டு பாதுக்காக்கப்பட வேண்டும். அரையாண்டு தேர்வு தேர்ச்சி குறித்து ஆசிரியர்களிடம் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அரையாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டு மாணவர்களிடம் வழங்கி சரிபார்த்திட வேண்டும். பள்ளிகளில் நூலக செயல்பாடுகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ் ,ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத் திறன் அடைவு பெறாத மாணவர்கள் எவருமில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story