குடிநீர் பிரச்சினை குறித்த ஆய்வுக்கூட்டம்!
ஆய்வுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த வாரங்களில் பொதுமக்களுக்கு வழங்குவதில் இருந்த பிரச்சனைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்ததோடு, பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மாவட்டத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்.
குளோரின் கலந்த குடிநீர் மட்டுமே பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சுதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செய்ய பொறியாளர் குமரவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி பொறியாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.