போதைப்பொருட்கள் தடுப்பு தொடர்பாக ஆய்வு கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்,போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி. தெரிவித்ததாவது, மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு இருக்கும் எனில் விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக இது குறித்து போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவர்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திடவேண்டும்.மருத்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில் அடிக்கடி மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து. போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் மருந்து கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்தகுழு ஒருங்கிணைந்து செயல்பட்டு, போதைப்பொருட்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப, தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம். மாவட்ட மேலாளர் (டாஸ்மார்க்) எஸ்.மகேஷ்வரி உதவி ஆணையர் கலால் தர்மதா தேசிய நல குழுமம்/தேசிய நியமன அலுவலர் மரு.ராஜ்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அலுவலர்கள், மாவட்ட மனநல திட்ட அலுவலர்கள். உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story