வனத் தீ கட்டுப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட அளவிலான வனத் தீ கட்டுப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வனத் தீ கட்டுப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் (15.03.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: குடிநீருக்காக மான்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் அடிக்கடி சாலையில் அடிபடுவது, விவசாய கிணறுகளில் விழுவது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு காப்புக்காடுகளுக்குள் 20 இடங்களில் நீர்தொட்டிகள் அமைக்க ஆவணம் செய்யப்படும். வன விலங்குகள் குடிநீர் மற்றும் உணவுக்காக காடுகளை விட்டு வெளியே வருவது தவிர்க்கப்பட்டால் அதன் உயிரிழப்புகள் குறையும். எனவே அனைத்துதுறை அலுவலர்களும் பெரம்பலூர் மாவட்ட வன உயிரினங்கள் மற்றும் காப்புக்காடுகளை பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து, வன தீ தடுப்பு மற்றும் மேலாண்மை பற்றிய கூட்டப் பொருள்களை மாவட்ட வன அலுவலர் அவர்கள் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில், சார் ஆட்சியர் கோகுல் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story