சுகாதார பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.
மேயர் பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத் வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி. அமித், இ.ஆ.ப., (தெற்கு), பிரவீன் குமார், (மத்தியம்),கட்டா ரவி தேஜா, (வடக்கு), நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story