வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பற்றிய ஆய்வுக்கூட்டம்..!
சுருக்கமுறை திருத்தம் பற்றிய ஆய்வுக்கூட்டம்..!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும் , தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையருமான வீரராகவ ராவ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் , பாஜக , ஆம் ஆத்மி , காங்கிரஸ் , தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்க வேண்டும் எனவும் , ஆதார் அட்டையை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறித்து நிர்பந்திக்க கூடாது, புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம்கள் மற்றும் முன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.