தஞ்சாவூர் - சென்னை இரட்டை ரயில் பாதை ஆய்வு

தஞ்சாவூர் - சென்னை இரட்டை ரயில் பாதை ஆய்வு
பேரணி
தஞ்சாவூர் - சென்னை இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஜாம்ப்ரேட் என்கிற அகில இந்திய அளவில் ரயில்வே பள்ளிகளைச் சார்ந்த சாரண, சாரணியர்களின் அணிவகுப்பை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: திருச்சி ரயில்வே கோட்டத்தில் அம்ரித் பாரத் நிலைய திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. திருவாரூர் - காரைக்குடி தடத்தில் மின்மயமாக்கும் பணி மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் - பேரளம் புதிய வழித்தடப் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி - தஞ்சாவூர் இடையே மெமு ரயில் விரைவில் இயக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தஞ்சாவூர் - சென்னை இடையே இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டால் தான் கூடுதல் ரயில் இயக்க முடியும். தஞ்சாவூர் - சென்னை இடையேயான இரட்டை ரயில் பாதைக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.

தஞ்சாவூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி இரு மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார் அன்பழகன். இந்த அணிவகுப்பு காந்திஜி சாலை, நீதிமன்ற சாலை வழியாக பெரிய கோயிலை சென்றடைந்தது. இதில், பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஏறத்தாழ 2 ஆயிரத்து 400 சாரண, சாரணியர்கள் பெரியகோயிலை சுற்றிப் பார்த்தனர்.

Tags

Next Story