கான்கிரீட் ரோடுகள் அமைப்பது குறித்து ஆய்வு

திருச்செங்கோட்டில் கான்கிரீட் ரோடுகள் அமைப்பது குறித்து நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவாட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு பகுதியில் உள்ள மாரிமுத்து சந்து, மற்றும் மேட்டுத்தெரு எண் 3 ஆகிய பகுதிகளில் கான்கிரிட் சாலைகள் அமைப்பது குறித்து நகர்மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு அவர்கள் ஆய்வு செய்தார். அவர்களுடன் நகராட்சி பொறியாளர் சரவணன் அவர்கள் உதவி பொறியாளர் செந்தில்குமரன் மற்றும்,நகர மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story