பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்  குறித்து ஆய்வு

ஆய்வு 

வானூர் அடுத்த கண்டமங்கலத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. கொத்தம்பாக்கம் பகுதியில் வீடு கட்ட பணி ஆணை பெற்றும் பலர் வீடுகள் கட்டாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் ராஜஸ்ரீ அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணி ஆணை பெற்றும் வீடு கட்டாமல் உள்ள நபர்களிடம் உடனடியாக கட்டுமாறு கூறினார், ஆய்வின்போது செயற்பொறியாளர் ராஜா, கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமு, சிவகுமார், உதவி பொறியாளர் குகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கண்டமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Tags

Next Story