ஏர்வைகாடு கிராமத்தில் உள்ள வெள்ளையாற்றில் ஆய்வு

ஏர்வைகாடு கிராமத்தில் உள்ள வெள்ளையாற்றில் ஆய்வு

ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர் 

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் ஏர்வைகாடு கிராமத்தில் உள்ள வெள்ளையாற்றில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

டெல்டா மாவட்டத்திற்கு குறுவை, சம்பா தாளடி சாகுபடிக்கு கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்துதண்ணீர் திறக்கப்பட்டது.

நாகை மாவட்டம் திருக்குவளை, கீழையூர் பகுதிகளில் சுமார் 25,000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்து .அறுவடை முடிந்து உழவு செய்து பெரும்பாலான விவசாயிகள் தாளடி நெல் சாகுபடி நேரடி நெல்வதைப்பு செய்திருந்தனர்.

100 முதல் 110 நாள் வயதுடைய நெல் ரகங்களை தாளடிபயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது 60நாட்கள் முதல் 80நாட்கள் வயதுடைய பயிர்களாக தண்டு உருளும் பருவம் தொண்டை கதிர் பருவம் மற்றும் கதிர்கள் வெளிவந்த நிலையில் உள்ளன.

இந்நிலையில் நெற் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினால்தான் பயிர்கள் நல்ல மகசூலை கொடுக்கும் என்ற நிலையில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.இநத நிலையில், மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் ஆற்றில் நீர் வரத்தின்றி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டத்திற்கு தாளடி நெல் பயிர்களை காப்பாற்றுவதற்காக இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வந்தடைந்தது.அதனை சென்னையிலிருந்துது நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் ஏர்வைகாடு கிராமத்தில் உள்ள வெள்ளையாற்று சட்டரஸ்சில் ஆய்வு செய்தார்.

அருகில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்ரமணியன், தஞ்சை வட்டம் காவேரி வடிநில கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் , செயற்பொறியாளர் ராஜேநாதிரன் உதவிசெயற்பொறியாளர் கமலகண்ணன் உதவி பொறியாளர்கள் தங்கமுத்து, ஊராட்சிமன்ற தலைவர் தனபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story