வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையருமான முனைவர் வெங்கடாசலம், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கற்பகம், ' முன்னிலையில் டிசம்பர் 15ம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்காக மனு அளித்துள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மனுவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தார் தொடர்ந்து,

பெரம்பலூர் வடக்குமாதவி சாலை, மலையாளப்பட்டி மற்றும் அடைக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் பெயர் சேர்க்க, நீக்க,திருத்தம் செய்ய விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மனுவின் உண்மைத்தன்மை குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, வருவாய் கோட்டாட்சியர் சத்தியபால கங்காதரன், தேர்தல் தனி வட்டாட்சியர் அருளானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story