பருவ மழை தொடர்பான ஆய்வுக்கூட்டம்

திண்டுக்கல்லில் வடகிழக்குப் பருவ மழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது‌ திண்டுக்கல் மாவட்டத்தில் 84 தாழ்வான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு அதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 4 இடங்கள் நடுத்தர பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும். 56 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன.என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Tags

Next Story