சு.வெங்கடேசன் மக்களை சந்திக்கவே இல்லை: அதிமுக வேட்பாளர்

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர்
அதிமுக சார்பில் மதுரை பாராளுமன்றத்தில் போட்டியிடும் மருத்துவர் சரவணன் இன்றைய தனது வேட்பு மனுவை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதாவிடம் வேப்பமனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, வெற்றி வாய்ப்புகள் எங்களுக்கு மிகவும் பிரகாசமாக. மதுரைக்கு 8000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி செய்துள்ளது. எங்களின் பத்தாண்டு கால சாதனையை மக்களிடத்தில் கூறி வாக்குகள் சேகரிப்போம்.
திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் ஏற்கவில்லை, மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இது எங்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் வெற்றி பெற்ற பிறகு மக்களை சந்திக்கவே இல்லை. அதிமுக மேற்கொண்டு வந்த வளர்ச்சி திட்ட பணிகளை திமுகவின் சாதனை போல ஸ்டிக்கர் ஒட்டி மதுரை எம்பி செய்து வந்தார் அதனை மக்கள் நம்ப மாட்டார்கள். என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, எஸ் டி பி ஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட அதிமுகவின் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
