திரவுபதியம்மன் கோவிலில் சுபத்திரை திருக்கல்யாணம்

திரவுபதியம்மன் கோவிலில் சுபத்திரை திருக்கல்யாணம்

திருக்கல்யாணம் 

நிமிலி திரௌபதி அம்மன் கோவிலில் சுபத்திரை திருக்கல்யாணத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி பஸ் நிலையம் அருகே உள்ள திரவுபதிம்மன் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் கண்ணன் திருஅவதாரம், பாண்டவர்கள் பிறப்பு, கவுரவர்கள் தோற்றம், திரவுபதி தோற்றம், பகாசூரன் வதம், வில் வளைப்பு, வீர திரவுபதி திருமணம் ஆகியவை குறித்து சொற்பொழிவு நடைபெற்று வந்தது.

தொடர்ந்து சுபத்திரை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கண்ணபிரானின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனனுக்கு மங்கள வாத்திய இசையுடன் திருமணம் செய்துவைக்கும் நிகழ்ச்சி சொற்பொழிவாக விவரித்து கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து உற்சவர் திரவுபதியம்மன் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில் கரியாக்குடல் மகா சரபேஸ்வரர் பீடாதிபதி ஞானப்பிரகாச சுவாமிகள், பத்மபுரம் பாலானந்த சுவாமிகள், ஜவ்வாது மலை நிலாநாத வர்மா அம்மையார் மற்றும் சிறுணமல்லி, அசநெல்லிகுப்பம், கீழ்வீதி, ரெட்டிவலம், பனப்பாக்கம், சயனபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story