பொங்கல் பண்டிகைக்கு நிதி; தபால் மூலம் மனு அளிப்பு

பொங்கல் பண்டிகைக்கு நிதி; தபால் மூலம் மனு அளிப்பு

  பண்ருட்டியில் பொங்கல் பண்டிகைக்கு நிதி உதவி வழங்குமாறு முதல்வருக்கு தபால் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டியில் பொங்கல் பண்டிகைக்கு நிதி உதவி வழங்குமாறு முதல்வருக்கு தபால் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை மேலும் சிறப்பாக கொண்டாடுகின்ற வகையில் தமிழக அரசு பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் அங்கன்வாடி மூலமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுப்பை வழங்கி வருகிறது. இதில் கூடுதலாக மண்பானை தொழிலாளர்களின் நலன் கருதி பொங்கல்கொண்டாடும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைத்திட மண் பானை வழங்கிடவும். இந்நிலையில் இஸ்லாமியர்கள், சிறிஸ்துவர்கள் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை. அவர்கள் கொண்டாடக்கூடிய ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தமிழக அரசு சார்பில் எண்ணற்ற வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து அரிசி, தானியம் போன்ற பொருட்களை தமிழக அரசு இலவசமாக அளித்து வருகின்றது.

அதேபோன்று அனைத்து சமுதாய மக்களும் அவரவர் கொண்டாடும் பண்டிகைகளுக்கு தேவைக்கேற்ப பரிசு பொருட்களை வழங்கிடவும், பொங்கல் பண்டிகை கொண்டாடாதவர்களுக்கு பொங்களுக்கு அளிக்கக்கூடிய சிறப்பு பரிசு தொகுப்பை ரத்து செய்திடவும் இதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வீண் செலவுகள் குறைந்து பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு அரசு சார்பில் ரூ.5000 வழங்கிடவும் இந்து மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மனுவை இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு தபால் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story