தொண்டமாந்துறை மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்

தொண்டமாந்துறை மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்

மனு அளித்த மக்கள்

தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி செய்து தர கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந் துறையைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் பிப்ரவரி 12ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் தங்கள், கிராமத்தில் போட்ட தார் சாலை தரமற்ற சாலையாக உள்ளதாகவும், கற்கள் பெயர்ந்து கிடப்பதாகவும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருவதாகவும்,மேலும் தண்ணீர் குழாய் இருந்தும் தங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும்,

போதுமான கழிவறை வசதி செய்து தர வேண்டும் என் கேட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால் தற்போது மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாகவும் இதன் மீது நடவடிக்கை இல்லை என்றால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் ,

Tags

Read MoreRead Less
Next Story