திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் சுப்பராயன் போட்டி

திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் சுப்பராயன் போட்டி

வேட்பாளர் சுப்ராயன்

திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளராக இரண்டாவது முறையாக சுப்பராயன் போட்டியிடுகிறார்.

திருப்பூர் அணைக்காடு பகுதியைச் சேர்ந்த மில் தொழிலாளியும், கம்யூனிச ஆதரவாளருமான குப்புசாமியின் மகன்தான் கே.சுப்பராயன். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் சுப்பராயன், 1969-ல் தனது 22-வது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராகத் தன்னை இணைத்துக்கொண்டவர்.

திருப்பூர் வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், பனியன் தொழிலாளர் சங்கச் செயலாளர் எனப் பணியைத் தொடங்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளர், மாநிலத் துணைச் செயலாளர், அகில இந்திய தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்திருக்கிறார்.

தற்போது 76 வயதாகும் கே.சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டு குழுத் தலைவராகவும் அகில இந்திய ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் துணைத் தலைவராகவும், பனியன் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். 1970-ல் தொடங்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். 1985, 1996-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில்,

திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் வெற்றிபெற்ற சுப்பராயன், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூரில் தோல்வியைத் தழுவினார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 17 வது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம் எஸ் எம் ஆனந்தனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் தற்பொழுது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருப்பூரில் களம் இறங்குகிறார்

Tags

Next Story