திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக சுப்பராயன்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக சுப்பராயன்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக சுப்பராயன் 

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் சுப்பராயன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்பி ஆனார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு கே.சுப்பராயன் வெற்றி பெற்றார். திருப்பூர் தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கே.சுப்பராயன் வெற்றி வாகை சூடினார். தொடர்ந்து 2-வது முறையாக திருப்பூர் தொகுதியில் எம்.பி.ஆகியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 15 லட்சத்து 30 ஆயிரத்து 14 மொத்த வாக்குகள் இருந்தன. 11 லட்சத்து 15 ஆயிரத்து 693 வாக்குகள் பதிவானது. இதில் கே.சுப்பராயன் 5 லட்சத்து 8 ஆயிரத்து 725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை விட 93 ஆயிரத்து 368 வாக்குகள் அதிகம் பெற்றார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 624 வாக்குகள் பதிவானது. இதில் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுப்பராயன் 4 லட்சத்து 72 ஆயிரத்து 739 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. அருணாச்சாலம் 3 லட்சத்து 46 ஆயிரத்து 811 வாக்குகள் பெற்றார். இதனால் சுப்பராயன் 1 லட்சத்து 25 ஆயிரத்து 928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த ஆண்டை விட வாக்குகள் எண்ணிக்கை அதிகமான வாக்குகளையும் பெற்றுள்ளார். முன்னதாக 2004&ல் சுப்பராயன் கோவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது- 1985, 1996 ஆகிய ஆண்டுகளில் எம்.ஏல்.ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர் சுப்பராயனுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிறிஸ்துராஜ் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

இதில் தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் ஓம்பிரகாஷ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ-. மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், கமிஷனர் பவன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும், ரெயில் நிலையம் அருகே உள்ள பெரியார், அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர்.

Tags

Next Story