திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்பு சுப்பராயன் செய்தியாளர் சந்திப்பு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்பு சுப்பராயன் செய்தியாளர் சந்திப்பு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்பு சுப்பராயன் செய்தியாளர் சந்திப்பு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்பு சுப்பராயன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுப்பராயன் 125928 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த சுப்பராயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார் உடன் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

சான்றிதழ் பெற்ற பின்னர் வெளியே வந்த சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தபோது மக்களை மடைமாற்ற முயன்ற மோடி அமைச்சரவையின் தாக்குதலையும் கட்டமைத்த பொய்யையும் மக்கள் பொடிப்பொடி ஆக்கி விட்டார்கள். கருத்து திணிப்பு உண்மை இல்லை. மோடியின் உள்நோக்கத்தை பாதுகாக்க கட்டமைத்த ஒன்று என்று மக்கள் நிரூபித்து விட்டனர். இந்தியா கூட்டணி நிச்சயம் அதிகாரத்திற்கு வரும். இந்திய வரலாற்றில் மறக்க முடியாதவர் ஜவகர்லால் நேரு. 17 காலம் ஆண்ட அவரால் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்பை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து ஜனநாயக அரசியல் அமைப்பை தகர்கின்ற வேலைகளை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது.

ஜனநாயக அரசியல் அமைப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் நாங்கள் சிலராக இருந்தோம். இன்றைக்கு சரி சம பலத்துடன் உள்ளே செல்கிறோம். அரசியல் அமைப்புக்கு எதிராக தாண்டவமாட முடியாது. அந்த அளவு மிகுந்த பலத்தோடு மக்கள் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நல்லதே நடக்கும் இன்னும் இரண்டு ஒரு தினங்களில் முழு விவரம் வெளிப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜனநாயக அரசியல் அமைப்பு காப்பாற்றப்பட வேண்டும். 10 ஆண்டு அரசியல் பொருளாதார சமூக வாழ்வில் இழைக்கப்பட்ட தீங்கில் இருந்து விடுவிக்க புதிய அரசு மேற்கொள்ளும். இந்த அணி மேற்கொள்ளும். என தெரிவித்தார்.

Tags

Next Story