சுப்ரமணிய சுவாமி வீதியுலா

சுப்ரமணிய சுவாமி வீதியுலா

சுவாமி வீதியுலா

சூளாங்குறிச்சியில் சுப்ரமணிய சுவாமி வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, 9 நாட்கள் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. உற்சவர் விநாயகர் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிகளை சிறிய தேரில் எழுந்தருள செய்து, கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்தனர்.

கடந்த 23ம் தேதி வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம், 24ம் தேதி தேர்திருவிழா, 25ம் தேதி அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் உற்சவர் சுவாமிகளை கொண்டு வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்தனர்.

Tags

Next Story