பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை செய்தவர்களுக்கு விருது
மாவட்ட ஆட்சியர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது - 2024-ம் ஆண்டு பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு சுதந்திர தின விழாவின் போது விருது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டும், 18வயதிற்குமேற்பட்டவராகவும்,குறைந்தபம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மைகளில் பணியாற்றியவராகவும், தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
விருதினை பெறுவதற்கு திருப்பூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின் அவர்கள் தமிழக அரசின் விருதுகள் http://awards.tn.gov.in, என்ற இணையத்தளத்தில் கடந்த மே மாதம் 21-ந் தேதி முதல் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாளாகும். மேலும் இணையதளத்தில் விண்ணப்பித்த அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்-35-ல் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது...